பதிவு செய்த நாள்
17
அக்
2019
12:10
மயிலம்: மயிலம் முருகர் கோவிலில் கிருத்திகை வழிபாடு நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள பாலசித்தர், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி மற்றும் நவக்கிரகங்களுக்கு அபிஷேக, வழிபாடும், 11:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது.
விழாவையொட்டி, மூலவர் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடு களை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.திருக்கோவிலுார்கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு காலை 8:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சண்முகப் பெருமானுக்கு மகா அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு அர்ச்சனை, மகா தீபாராதனை, உற்சவர் ஆலய வலம் வந்தது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை, சிவாச்சாரியார்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.