தேவகோட்டை: ஐப்பசி என்ற துலா மாதத்தின் முதல் தேதியும், கடைசி தேதியும் சுவாமிகள் தேவகோட்டை மணிமுத்தாறில் தீர்த்தவாரி செய்வது வழக்கம். முதல் தீர்த்தவாரியை முன்னிட்டு நேற்று (அக்., 18ல்) அதிகாலை கைலாசவிநாயகர் ஆற்றில் எழுந்தருளி தீர்த்தவாரி செய்தார். அதனை தொடர்ந்து இறகுசேரி மந்திரமூர்த்தி விநாயகர் பகல் 11:00 மணிக்கு ஆற்றிற்கு எழுந்தருளி தீர்த்தவாரி செய்தார். பகல் 1:00 மணிக்கு சிலம்பணி சிதம்பர விநாயகர் மீனாட்சி சுந்தரேஸ்வரர், கைலாசநாதர், கோதண்டராமர், கிருஷ்ணர், கோட்டூர் நயினார்வயல் அகத்தீஸ்வரர், நகரின் முக்கிய வீதிகளில் வழியே வீதி உலா வந்து மணிமுத்தாறில் எழுந்தருளி தீர்த்தவாரி செய்தனர். தீர்த்தவாரியை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்