கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19அக் 2019 11:10
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நித்ய திருக்கல்யாண வைபவம் நேற்றுடன் பூர்த்தியானது.
கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் கடந்த 30 நாட்களாக நடந்து வந்த நித்ய திருக்கல்யாண உற்சவம் பூர்த்தி அடைந்தது. அதனையொட்டி நேற்று அதிகாலை விஸ்வரூப தரிசனம், சுப்ரபாத சேவை, பசுபூஜைக்குப் பின்னர் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி உற்சவர்களுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து தாயார் மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனர்.பகவத் பிரார்த்தனை, விஸ்வக்சேனர் வழிபாடு, அங்குரார்பனம், பூணுால் சாற்றுதலும், யாகமும் மங்கள வாத்தியங்கள் முழங்க பெருமாள், தாயார் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அர்ச்சகர் தேசிக பட்டர் தலைமையிலான குழுவினர் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.