மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அடுத்த, சிறுமுகை இடுகம்பாளையத்தில், 750 ஆண்டுகளுக்கும் மேலான, அனுமந்தராயசுவாமி கோவில் உள்ளது.இக்கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம், 5ம் தேதி நடந்தது. அதையடுத்து மண்டல அபிஷேக பூஜைகள், 48 நாட்களுக்கு நடந்தன.மண்டல பூஜைகளின் நிறைவு பூஜை நேற்று காலை, 7:00 மணிக்கு ேஹாமம் பூஜையுடன் துவங்கியது. திவ்யபிரபந்தம், வேதபாராயணம், திருவாராதனம் பூர்ணாஹுதி, உபசாரங்கள் ஆகிய சாற்று முறைகள் நடந்தன. அதை அடுத்து ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.