தர்மத்தை பின்பற்றுவதே தீபாவளி சுவாமி சிவயோகானந்தா பேச்சு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2019 04:10
மதுரை : தர்மத்தை பின்பற்றுவதால் உள்ளத்திலும், இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கும். அந்த நாளே தீபாவளி, என சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா கூறினார். மதுரை டோக்நகர் சின்மயா மிஷனில் சின்மயா சேவா அறக்கட்டளை சார்பில் தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 200க்கும் மேற்பட்டோருக்கு புத்தாடைகளை விஜயா ஸ்ரீனிவாசன் வழங்கினார். பாரமவுண்ட் டெக்ஸ்டைல்ஸ் சார்பில் இனிப்பு, காரம் வழங்கப்பட்டது.
சுவாமி சிவயோகானந்தா பேசியதாவது: நம் எல்லோருக்கும் எல்லாவற்றையும் தருபவர் இறைவன் ஒருவரே. அதை பெறக்கூடிய தகுதியை நாம் வளர்த்து கொள்ள வேண்டும். தீப ஒளி, மகிழ்ச்சியை குறிக்கக்கூடியது. நன்றி உணர்வு, திருப்தி, பெரியோர்களை மதித்தல், தீய பழக்கங்களை கைவிடல், தர்மத்தை பின்பற்றுதல் போன்றவற்றால் உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கும். அந்த நாளே தீபாவளி திருநாள், என்றார்.