இங்குள்ள கிழக்கு ராஜ வீதி உள்ளிட்ட பகுதிகளில், நேற்று திரிந்த நாய் ஒன்று, சுற்றுலாப் பயணியர், உள்ளூர் நபர்கள் என, பலரை கடித்து குதறியது. அவர்கள், மாமல்லபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர்.இது குறித்து தகவல் அறிந்த பேரூராட்சி நிர்வாகத்தினர், அப்பகுதிக்கு விரைந்தனர். எனினும், நாயை காணவில்லை. இதற்கிடையில், ஒற்றைவாடை தெரு பகுதியில் திரிந்த அந்த நாயை, பொதுமக்கள் கற்களால் தாக்கி சாகடித்ததாக கூறப்படுகிறது.முக்கிய சுற்றுலாப் பகுதியான இங்கு, திரியும் நாய்களை, பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங் வருகையால், பேரூராட்சியினர் சமீபத்தில் பிடித்தனர். சாலையில் விடுவித்ததால், அவை சாலையில் திரிகின்றன.