பதிவு செய்த நாள்
29
அக்
2019
11:10
சென்னை: வடபழநி ஆண்டவர் கோவிலில், மகா கந்தசஷ்டி விழா, லட்சார்ச்சனையுடன் கோலாகலமாக, நேற்று துவங்கியது. சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில், முருகப்பெருமான் பாத ரட்சைஉடன் அருள்பாலிக்கிறார்.லட்சார்ச்சனைபழநிக்கு செல்ல முடியாத பக்தர்கள், இங்கு வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் மகா கந்தசஷ்டி விழா விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்தாண்டிற்கான விழா, 27ம் தேதி, வரசித்தி விநாயகரின் மூஷிக வாகனப் புறப்பாட்டுடன் துவங்கியது. விழாவின், இரண்டாம் நாளான நேற்று காலை, 9:00 மணிக்கு, மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை துவங்கியது.
நவ., 2ம் தேதி வரை நடக்கும் லட்சார்ச்சனை, தினமும் காலை, 7:30 மணி முதல் மதியம், 12:30 மணி வரையிலும், மாலை 4:30 மணி முதல் இரவு, 8:30 மணி வரையிலும் நடக்கிறது.விழாவின் பிரதான நாளான, நவ., 2ம் தேதி, உச்சி காலத்துடன் மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை பூர்த்தியாகிறது. அதை தொடர்ந்து, சூரசம்ஹார உற்சவம் நடக்கிறது. பின், தெய்வானை சமேத சண்முகப் பெருமான் மயில் வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது.
மயில் வாகனம்: நவ., 3ம் தேதி இரவு, பாலசுப்ரமணியர் சமேத வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம், மயில் வாகன புறப்பாடு நடக்கிறது. நவ., 4ம் தேதி முதல் நவ., 7ம் தேதி வரை, இரவு சுவாமி புறப்பாடு நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், துணைக் கமிஷனர் கே.சித்ராதேவி ஆகியோர் செய்துள்ளனர்.