திருப்பதி: சிறப்பு தரிசன அடிப்படையில் இன்று (29ம் தேதி) வயதானவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு திருப்பதி திருமலையில் சிறப்பு தரிசனம்வழங்கப்படுகிறது. இதே போல நாளை (30ம் தேதி) ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தையுடன் கூடிய பெற்றோருக்கு சிறப்பு தரிசனம் வழங்கப்படுகிறது. காலை 9 மணியில் இருந்து மதியம் 1:30 வரை சுபதம் வழியாக சிறப்பு தரிசன பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். பெற்றோர்கள் குழந்தையுடனும் தகுந்த ஆவணங்களுடனும் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.