பதிவு செய்த நாள்
29
அக்
2019
12:10
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் தீபாவளியை முன்னிட்டு நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதைமுன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில், ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார், பெரியபெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி மற்றும் ஆழ்வார்கள் எழுந்தருளினர். அவர்களுக்கு புத்தாடை சாற்றி, சிறப்பு பூஜைகளை ராஜாபட்டர் செய்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், பட்டர்கள் அனந்தராமன், வாசுதேவன், சுதர்சன், அரையர் முகுந்தன், மணியம் கோபி, ஸ்தானிகம் கிருஷ்ணன், ரமேஷ் மற்றும் கோயில் அலுவலர்கள் பங்கேற்றனர். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் தீபாவளியை முன்னிட்டு ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார், பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆழ்வார்களுக்கு புத்தாடை சாற்றி சிறப்பு பூஜைகள் நடந்தது.