Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தீபாவளி கொண்டாட்டம் தீபாவளி லேகியம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனமே விழித்தெழு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2019
03:10

நீங்கள் கோடி கோடியாக சம்பாதிக்க வேண்டுமா? இதோ இப்போதே உங்களால் முடியும்! ஆனால் நீங்கள் ஒன்றைச் செய்ய வேண்டும். எழுந்திருங்கள், காலில் ஒரு ஷூவை மாட்டிக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் விடாது ஓடுங்கள். பிறகு எத்தனை கிலோ மீட்டர் ஓடினீர்கள் என பாருங்கள். ஒரு மணி நேரத்தில் நீங்கள் ஓடிய தூரம் 45 கி.மீ.,யாக இருந்தால் கோடிக்கணக்கில் நீங்கள் சம்பாதிக்கலாம்! ஏனெனில் ஒலிம்பிக் பந்தயத்தில் ’லைட்னிங் போல்ட்’  எனப்படும் உசேன் போல்ட்டின் வேகம் இது தான்!

நாம் ஒரு விளையாட்டில் ஈடுபடுகிறோம். அதை விளையாட்டாக செய்கிறோமா அல்லது சீரியசாக செய்கிறோமா என யோசிக்க வேண்டும். விளையாட்டை சீரியசாக எடுத்தால் அதுவே நம் தொழிலாகி வருமானத்தைக் கொடுக்கும். ஆனால் உலகளவில் விளையாட வேண்டுமென்றால் குறிப்பிட்ட விளையாட்டில் வீரர்கள் எந்த தரத்தில் உள்ளார்களோ அப்படி நாமும் விளையாட வேண்டும். நாம் ஒரு வேலையை எப்படி செய்கிறோம், அதை வேறு ஒருவர் எப்படி செய்கிறார் என்பதில் உள்ள வேறுபாட்டை ’இடைவெளி’ என சொல்வர்.

சற்றே யோசித்து பாருங்கள். உசேன் போல்டுக்கும் இரண்டு கால்கள். நமக்கும் அப்படித் தான். அவர் கால்களால் ஓடுகிறார். நாமும் தான்.

ஓட வேண்டிய தூரமும் நேரமும் நமக்கும் அவருக்கும் ஒன்று தானே? அப்படியென்றால் வேகத்தில் இருக்கும் ’இடைவெளி’ தான் நம்மையும் அவரையும் வேறுபடுத்துகிறது. இந்த வித்தியாசம் எதில் என்று யோசியுங்கள்.  

இவ்வளவு வேகமாக ஓட கால்களுக்கு அவர் எப்படி பயிற்சி கொடுக்கிறார்? நம்மாலும் அதே போல கால்களுக்கு பயிற்சி அளிக்க முடியும். ஆனால் அதற்கு நம் உடல், மனம் ஒத்துழைக்க வேண்டும்.

இதையே ’ஒலிம்பிக் மைன்ட் செட்’ (Oடூதூட்ணீடிஞி Mடிணஞீ ண்ஞுt) என்பர். ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளனர். தங்களின்  மனம், உடலை தயார் செய்ய வீரர்கள் கொண்டிருந்த ஏழு சிறப்பான பண்புகளை வெளியிட்டுள்ளனர்.

* மனதில் உறுதி. ஆங்கிலத்தில் இதை ’டிட்டர்மினேஷன்’ என்பர். எது எப்படி இருந்தாலும் நான் ஒலிம்பிக் விளையாட்டில் சாதிப்பேன் என்ற மன உறுதி. இதோ அதைச் சொல்லும் பாரதியாரின் பாடல்

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமானது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்

* மன வலிமை.  உறுதியான மனமே தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட வைக்கும். மனதில் வலிமை இருந்தால் மற்றவர்கள் கேலி செய்தாலும், தற்காலிகமாக தோல்வி அடைந்தாலும் பொருட்படுத்தாமல் மீண்டும் முயற்சி செய்யத்
தூண்டும். “நான் கடல் அலைகளை ரசிக்கிறேன்; அவை விழுந்து எழுவதால் அல்ல, ஒவ்வொரு முறை விழும் போதும் எழுவதால்” என்ற பொன்மொழி இவர்களுக்கு பொருத்தமானவை. நான்கு பேருக்கு முன்  இடறி விழுந்தால் சிரிப்பார்களே என நாம் வெட்கப்படுகிறோம். ஆனால் உலகமெங்கும் கோடிக்கணக்கானவர்களை பார்க்கும்போது தோற்றாலும், மீண்டும் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற ஓலிம்பிக் வீரர்களை சிந்தித்து பாருங்கள்.

* எப்படி பயிற்சி செய்தால் அதாவது எத்தனை மணி நேரம் உழைத்தால் தங்கப்பதக்கம் கிடைக்கும் என்ற குறிக்கோளை நினைத்தபடி இரவும் பகலும் உழைக்கும் தவத்தைச்  செய்கிறார்கள். அண்மையில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உலகக்கோப்பையை வென்ற முதல் இந்தியப் பெண் என்னும் சிறப்பை பெற்றார். அவர் மணிக்கணக்கில் உழைப்பது,  ஜிம்மில்  உடலை வருத்தி பயிற்சி செய்வது குறித்த வீடியோ காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

* ’ஒரு உன்னதமான குறிக்கோளை நோக்கி செல்கிறேன், எனவே என்னுடைய கடுமையான உழைப்பை நேசிக்கிறேன்’ என தனக்குத் தானே  சொல்லிக்கொண்டே தன்னையே தான் ஊக்கப்படுத்தும் தன்மை. இதை ’செல்ப் மோட்டிவேஷன்’ (குஞுடூஞூ Mணிtடிதிச்tடிணிண) என்பர். இதன்பின் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் சோர்வு ஏற்படாது. இது பற்றி குமரகுருபரர் நீதிநெறி விளக்கத்தில் சொல்வதை கேளுங்கள்.

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார் கண் துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் செவ்வி
அருமையும் பாரார், அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்

* மனஅழுத்தத்தைத் தாங்கும் மனமுதிர்ச்சி.  குறிக்கோள் மேலே போகப் போக, மன அழுத்தமும் அதிகமாகும். ஒரு சாதாரண உதாரணம் மூலம் இதை விளக்கலாம். சைக்கிளில் ஓரிரு கி.மீ., தூரம் போக வேண்டும் என்றால் மனஅழுத்தம் இருக்குமா? இருக்காது. 100 கி.மீ., தூரத்தை சைக்கிளில் கடக்க வேண்டும் என்றால் மனஅழுத்தம் எப்படி இருக்கும்?

’குடிப்பழக்கம் வீட்டிற்கு நாட்டிற்கு கேடு’ என்ற நல்ல செய்தியைச் சொல்ல கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சைக்கிள் பயணம் மூலம் சொல்ல விரும்பினால் ஒருவரின் மனஅழுத்தம் எவ்வளவு இருக்கும் என நினைத்துப் பாருங்கள்! ஒரு குறிக்கோளை அடைய நமக்கு சில சாதனங்கள் தேவை. ஆங்கிலத்தில் ’ரிசோர்சஸ்’ என்பார்கள். இந்த உதாரணத்தில் சைக்கிள் ஒரு ரிசோர்ஸ். 1000 கி.மீ., ஓடக்கூடிய நிலையில் உங்கள் சைக்கிள் இருக்க வேண்டும். இடைவிடாமல் ஓட்ட உங்களுக்கு உடல், மனவலிமையும் இருக்க வேண்டும். இவை எல்லாம் தான் ரிசோர்சஸ்.

* எந்த தடைகள் குறுக்கிட்டாலும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை. இதை ஆங்கிலத்தில் ’பாசிட்டிவ் மென்டல் ஆட்டிட்யூட்’ என்பார்கள். பாரதியாரின் சில வரிகள் ஒலிம்பிக் வீரர்களின் மனத்திண்மைக்கு இலக்கணம்.

’எது நேரினும் இடர்பட மாட்டோம்
அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம்
கடல் பொங்கி எழுந்தாற் கலங்க மாட்டோம்
யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்
எங்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்’

* மிக நுண்ணிய கவனம். ஆங்கிலத்தில் ’ஸ்ட்ராங் மைக்ரோ போக்கஸ்’ என்பார்கள். அதாவது என் ஒலிம்பிக் கனவை அடைய நான் தினமும் செய்ய வேண்டியது, நான் அடைய வேண்டிய பயிற்சி, ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் உழைக்க வேண்டும், யாரிடம் பயிற்சி பெற வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக் கூடாது என்பதில் தெளிவுஇந்த ஏழு தன்மைகள் முன்னேறத் துடிக்கும் அனைவருக்கும் பொருந்தும்.  உடல் ஒத்துழைத்தால் சாதிக்கலாம். குறைபாடுகள் இருந்தால்? விழித்துக் கொண்ட மனதுக்கு உடல் குறைகள் ஒரு தடங்கலாக இருக்காது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar