பதிவு செய்த நாள்
30
அக்
2019
03:10
திருத்தணி: திருத்தணி அடுத்த, மத்துார் கிராமத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவி லில், நேற்று (அக்., 29ல்), செவ்வாய்க்கிழமையையொட்டி, காலை, 8:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது.
இதே போல், திருத்தணியில் உள்ள, தணிகாசலம்மன், பரமேஸ்வரி அம்மன், கங்கையம்மன், படவேட்டம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும், சிறப்பு பூஜைகள் நேற்று 29ம் தேதி நடந்தன.