Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் ... காணிக்கூர் பாதாள காளியம்மன் கோயில் விழா காணிக்கூர் பாதாள காளியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழநி ஆண்டவர் கோயிலில் பிரம்மாண்ட சக்தி கொலு; வரும் 11ல் துவங்குகிறது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடபழநி ஆண்டவர் கோயிலில் பிரம்மாண்ட சக்தி கொலு; வரும் 11ல் துவங்குகிறது

பதிவு செய்த நாள்

08 அக்
2026
01:10

சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ஆண்டவர் கோயிலில் இந்த வருடம் ‛சக்தி கொலு பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட உள்ளது. வரும் 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவங்கி அக் 19ம் தேதி வரை வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் சக்தி கொலு நடைபெற உள்ளது. சமயம் 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கி காலை மாலை இருவேளையும் பூஜைகள் நடைபெற்று, ஐப்பசி மாதம் 02ம் நாள் திங்கட்கிழமை 19ம் தேதி பூர்த்தியாகிறது. பக்தர்கள் அனைவரும் தினமும் நடைபெறும் லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், வேத பாராயணம், திருமுறை பாராயணம், சிறப்புப் பூஜை தீபாராதனை மற்றும் பொதுமக்களின் கொலு பாட்டு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தரிசனம் செய்து அம்பாளின் அருள் பெறலாம்.


புரட்டாசி மாதம் 29ம் நாள் 16ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 07.30 மணி முதல் 12.00 மணி வரை ஏகதின இலட்சார்ச்சனை தொடங்கி மாலை 04.30 மணி முதல் 08.30 மணி வரை நடைபெறவிருக்கிறது. இலட்சார்ச்சனையில் பங்குபெற விரும்பும் அன்பர்கள் அர்ச்சனை ஒன்றுக்கு ரூ.250/- செலுத்தி அம்பாளின் அருட்பிரசாதம் பெறலாம்.


முப்பெரும் தேவியர் வழிபாடு: நவராத்திரி விழா கொண்டாட்டத்தின் சிறப்பம்சமே கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரை வழிபடுவதுதான். முப்பெரும் தேவியர் மட்டுமல்ல, பக்தர்கள் வேண்டுதலுடன் வழங்கும் பொம்மைகளை கொண்டும்,  பிரசித்தி பெற்ற கோயில்களின் மூலவர் சிலைகள் தத்ரூபமாக காட்சிப்படுத்துவதும் வடபழனி ஆண்டவர் கோயில் சக்தி கொலுவின் தனிச்சிறப்பு. 


கொலு பார்வை நேரம்: காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை கொலுவில் உற்சவர் அம்மனுக்குத் தினமும் அந்த நாளுக்குரிய சிறப்பு அலங்காரம் செய்து பூஜை செய்யப்படும். கொலுவில் அம்மன் தரிசனம் பார்த்துவிட்டு வரும் பக்தர்கள் அனைவருக்கும் தினமும் பிரசாதம் வழங்கப்படும்


ஆன்மிக வினாடி வினா: கொலு கண்காட்சி நேரத்தில் ஆன்மிக வினாடி வினாவில் (Quiz) கலந்து கொள்ளும் அனைவருக்கும் உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்படுகிறது

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar