கள்ளழகர் கோயிலில் நவராத்திரி விழா: அக். 11 முதல் 20 வரை கோலாகலம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2026 01:10
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் நவராத்திரி விழா அக். 11 முதல் 20 வரை, விஜயதசமி உற்ஸவம் அக். 21ல் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் மாலை 5:10 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு கோயில் உட்பிரகாரத்தில் நடக்கிறது. விஜயதசமி அன்று, சுந்தரராஜ பெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி கோட்டைவாசல் முன்புள்ள அம்பு போடும் மண்டபத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருள்கிறார். அங்கு மாலை 4:30 மணிக்கு மேல் 5:10 மணிக்குள் பெருமாள் அம்பு போடும் உற்ஸவம் நடக்கிறது. கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் தினமும் காலை, மாலை கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் ஹரிஹரன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.