பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில், குருபெயர்ச்சியை முன்னிட்டு, குருபக வானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.விழாவையொட்டி, குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு தீபாராதனை நடந்தது.
விழாவில் ஏராளமான பக்தர்கள் பரிகார பூஜை செய்தனர். இதே போல் பண்ருட்டி சோமநாதர் கோவில், திருத்துறையூர் சிஷ்டகுருநாதர் கோவில், புதுப்பேட்டை காசிவிஸ்வநாதர் கோவில்களிலும் குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.