நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2019 03:11
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு திருமஞ்சனமும், தீபாராதனையும் நடந்தது. பாமா ருக்குமணி சமேதராய் வேணுகோபால சுவாமி ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அருள்தரும் ஐயப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.