பதிவு செய்த நாள்
02
நவ
2019
02:11
திருப்பூர்:’எது சரி, எது சரியில்லை என்று புரிந்து கொள்வதுதான் ஞானம்,’ என்று சொற்பொழி வாளர் ருக்மணி பேசினார்.திருப்பூர், விஸ்வேஸ்வரர் ஸ்வாமி கோவிலில், ’அநுபூதியில் அழகன்’ என்ற தலைப்பில் கந்தபுராண சொற்பொழிவு நடந்து வருகிறது.
அதில், சொற்பொழிவாளர் சேலம் ருக்மணி பேசியதாவது:கல்வி, பணம், சொந்தபந்தம் என எதுவுமே இல்லை என்று நினைப்பதே ஞானம். காரணம், ஞானம் மட்டுமே என்றும் நிலைத்து நிற்கும். இறைவனின் அருளைப் பெற்றால் அந்த ஞானத்தை பெற முடியும்.
இதற்காக, நேரத்தை செலவழிக்க வேண்டும். அதாவது அனைவரிடையேயும் அன்பாக பேச வேண்டும். அனுசரிப்புடன் பழக வேண்டும். காரணம், அனுபவிப்பது மட்டுமே வாழ்க்கை அல்ல. அதனை பலரிடமும் தெரிவிக்க வேண்டும். வாழ்வில் எந்தவித தவறும் செய்யாமல், அனைவரையும் நேசித்தால், இறைவன் நம்மிடையே பேசுவான். அதேபோல், ஏழையாய் இருக்கும் வரை அனைவரும் நல்லவர்களே. பணம் மற்றும் பதவி வந்துவிட்டால், அனைத்தையுமே மறுந்து விடுவர். இறைவனுக்கு நம்மை கொடுத்தால், அவன் தன்னையே நமக்கு கொடுப்பான். இவ்வாறு, ருக்மணி பேசினார்.