பதிவு செய்த நாள்
02
நவ
2019
02:11
உடுமலை:உடுமலை, சுற்றுப்பகுதி கோவில்களில், இன்று (நவ., 2ல்) சூரசம்ஹார விழா நடக்கிறது. உடுமலையில், கந்த சஷ்டி சிறப்பு வழிபாடு, கடந்த மாதம் 28ம் தேதி முதல் கோவில்களில் நடக்கிறது.
கந்த சஷ்டி விரத பூஜையின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (நவ., 2ல்), மாலை நடக்கிறது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், மதியம், 3:15 மணிக்கு, சுப்ரமணிய சுவாமிகள் வேல் வாங்கும் உற்சவம், மாலை, 4:00 மணிக்கு சூரசம்ஹார விழா ஆரம்ப மாகிறது. பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு அருகே குட்டைத்திடல் பகுதி, நெல்லுக்கடை வீதி, கொல்லம்பட்டறை பகுதிகளில், சூரசம்ஹார நிகழ்வு நடக்கிறது.
மாலை, 6:30 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிகளுக்கு அபிஷேக த்துடன், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடக்கிறது. நாளை, காலை, 10:30 மணிக்கு, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
மடத்துக்குளம்மடத்துக்குளம், பாப்பான்குளம் ஞானதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், இன்று (நவ., 2ல்) காலை, 11:00 மணிக்கு ஞானவேல் முருகன் அலங்காரம், ஸ்ரீ சண்முகார்ச் சனை, ஆறுவகை, பூக்கள், பழங்கள் மற்றும் அன்ன நிவேதனத்துடன் தீபாராதனை நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு வீரவேல்முருகன் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக் கிறது. மாலை, 5:00 மணிக்கு, ஞானவேல் முருகன் எழுந்தருளி, வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு வீதிகளில், வீரபாகு தேவரை துாது அனுப்புதல் நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து, தாரகாசுரன், பானுகோபன், சிங்கமுகாசுரன், சூரபத்ரனை வதம் செய்தல், மயில் வாகனத்துடன் சேவல் கொடி ஏற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.இரவு, 8:30 மணிக்கு, மலர் அலங்காரத்துடன் தண்டாயுதபாணி சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது. நாளை (நவ., 3ல்), மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்வசம், இரவு, சுவாமிகள் திருவீதி உலா நடக்கிறது.