பதிவு செய்த நாள்
02
நவ
2019
02:11
புதுச்சேரி: நைனார்மண்டபம் நாகமுத்துமாரியம்மன் கோவிலில், நாளை 3ம் தேதி திருக்கல் யாண உற்சவம் நடக்கிறது.நைனார்மண்டபம், நாகமுத்துமாரியம்மன் கோவிலில், ஆலய நிர்வாக குழு மற்றும் திருச்செந்துார் சுப்ரமணியர் சுவாமி அன்னதான அறக்கட்டளை இணை ந்து, கந்தர் சஷ்டி, சூரசம்ஹாரம், திருக்கல்யாண விழா கடந்த 25ம் தேதி, காலை விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. சிறப்பு அபிஷேகம் செய்து, பக்தர்களுக்கு காப்பு கட்டுதல், மகா தீபாராதனை நடந்தது. 29 ம் தேதி சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.நேற்று (நவ., 1ல்) மாலை சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று (நவ., 1ல்) காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை, கந்தர் சஷ்டி, விசேஷ ஹோமங்கள், மூல மந்திர ஹோமம், கலசாபிஷேகம், நடக்கிறது.
மாலை 4:00 மணிக்கு, சூரபத்மன் நகர் வலம் வருதல், சூரசம்ஹாரம் மற்றும் விஸ்வரூப தரிசனம் நடக்கிறது.நாளை 3ம் தேதி, காலை 7:30 மணிக்கு சீர்வரிசை கொண்டு வருதலும், காலை 9:00 மணிக்கு, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு, திருக்கல்யாண உற்சவம், துரைக்கண்ணு அமிர்தம்மாள் திருமண மண்டபத்தில் நடக்கிறது. அதைத் தொடர் ந்து அன்னதானமும், மாலை 4:00 மணிக்கு சுவாமி வீதி உலா நடக்கிறது.