சிங்கம்புணரி: சிங்கம்புணரி கூவாண அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது. நோய்நொடியின்றி மக்கள் வாழவும், விவசாயம், செழிக்க வேண்டி அய்யனார் கோயிலில் நேர்த்தி செலுத்தினர்.
இதற்காக கடந்த 15 தினத்திற்கு முன் புரவிகள் செய்ய பிடி மண் வழங்கினர். அரண்மனை புரவி உட்பட 6 புரவிகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. புரவிகள் மேல தெரு, சந்திவீரன் கூடம், சுக்காம்பட்டி சாலை வழியாக அய்யனார் கோயிலை அடைந்தது. விழா கமிட்டியினர் ஏற்பாட்டை செய்திருந்தனர்.