நெட்டப்பாக்கம் : வடுக்குப்பம் பிரசன்ன வெங்கடசே பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் நடந்தது. நெட்டப்பாக்கம் அடுத்த வடுக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பத்மாவதி தாயர் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் (நவம்., 12ல்) இரவு கருட சேவை உற்சவம் நடந்தது.
இதையொட்டி காலை மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு கருட சேவை உற்சவம் நடந்தது.