பதிவு செய்த நாள்
14
நவ
2019
12:11
புதுச்சேரி: புதுச்சேரி கவுசிக பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், ஊஞ்சல் உற்சவம் நேற்று (நவம்., 13ல்) நடந்தது. புதுச்சேரி ரயில் நிலையம் அருகே கவுசிக பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், 67ம் ஆண்டு கந்தர் சஷ்டி விழா, கடந்த மாதம் 27 ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது.
தொடர்ந்து துவஜாரோகனம் சஷ்டி ஆரம்பம், யானைமுகன் சம்ஹாரம், வேல் வாங்குதல், சிங்கமுகன் சம்ஹாரம், திருத்தேர், சூரசம்ஹாரம், திருக்கல்யாணம், தெருவடைச்சான், அவரோகனம், தெப்பல், முத்து பல்லக்கு ஆகிய உற்சவங்கள் நடந்தன.
இதனை தொடர்ந்து, நேற்று (நவம்., 13ல்) இரவு 9.00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில், பாலசுப்ரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் ஆடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.