பம்பா விளக்கு...பம்பா விளக்கு...


பம்பா விளக்கு...பம்பா விளக்கு...


ஆனந்த மயனே...

ஓம் ஆனந்த மயனே.. ஹரிஹர சுதனே... சுவாமியே சரணம் ஐயப்பா...

பம்பா விளக்கு...பம்பா விளக்கு...பரந்தாமன்
அருள் விளக்கு...
தெம்பாய் நடக்க... மலைகளை கடக்க...கணபதியே துணை நமக்கு...

தீவினை இருளில் திரிகளின் நாவில் தீர்ந்திடும் ஐயனின் நெய்விளக்கு
பாவம் பிணிகளை சுட்டு பொசுக்கும் பந்தள ராஜன் கை விளக்கு...

ஆனந்த மயனே.. ஹரிஹர சுதனே...ஐயா சரணம்...சுவாமியே சரணம்...

(பம்பா விளக்கு...பம்பா விளக்கு...)

காலையில் உதிக்கும் சூரியக்கதிர்கள்...கருணாமூர்த்தியின் நெய் விளக்கு...
ஆயிரம் கரங்களில் வெளிச்சத்தை ஊட்டும்...ஐயனின் நம்பிக்கை விளக்கு...

ஆனந்த மயனே.. ஹரிஹர சுதனே...ஐயா சரணம்...சுவாமியே சரணம்...

அந்தர சுந்தர சந்தன நிலவு...சன்னிதி வாசலில் பொன் விளக்கு

பம்பையில் ஆடி அசைந்திடும் தெப்பங்கள்...அருள் தரும் ஆண்டவன் அகல் விளக்கு...

(தீவினை இருளில்)..

(பம்பா விளக்கு...பம்பா விளக்கு...)

சுவாமியே...ஐயப்போ...ஐயப்போ...சுவாமியே...
சுவாமி சரணம்...ஐயப்ப சரணம்...ஐயப்ப சரணம்...சுவாமி சரணம்....

வானிலே தோன்றும் தாரகை மீன்கள்... சந்தன வாசனின் சரவிளக்கு...
கானக மரங்களின் கற்பக பூக்கள்...கரிமலை நாதனின் கர விளக்கு...

ஆனந்த மயனே.. ஹரிஹர சுதனே...ஐயா சரணம்...சுவாமியே சரணம்...

மாணிக்க மரகத பவளங்கள் வைரம்... மணிகண்ட மார்பின் அணிவிளக்கு...
ஆனந்த புன்னகை அருள்தரும் பூமலை...ஹரிஹரசுதனே மணிவிளக்கு...

(தீவினை இருளில்)..

(பம்பா விளக்கு...பம்பா விளக்கு...)

ஆனந்த மயனே.. ஹரிஹர சுதனே...ஐயா சரணம்...சுவாமியே சரணம்...

(பம்பா விளக்கு...பம்பா விளக்கு...)