பகவான் சரணம்...பகவதி சரணம்...


பகவான் சரணம்...பகவதி சரணம்...


பகவான் சரணம்...

பகவான் சரணம்...பகவதி சரணம்... சரணம் சரணம் ஐயப்பா!
பகவதி சரணம்...பகவான் சரணம்...சரணம் சரணம் ஐயப்பா!

பகவான் சரணம்...பகவதி சரணம்...
தேவன் பாதம்...  தேவி பாதம்...
பகவானே...பகவதியே...
தேவனே...தேவியே...  (பகவான் சரணம்...)

அகமும் குளிரவே அழைத்திடுவோமே சரணம் சரணம் ஐயப்பா!
பகலும் இரவும் உன் நாமமே
வரணும் வரணும் ஐயப்பா!

கரிமலை வாசா பாபவிநாசா
சரணம் சரணம் ஐயப்பா!
கருத்தினில் வருவாய் கருணையைப் பொழிவாய் சரணம் சரணம் ஐயப்பா!

மகிஷிசம்ஹாரா மதகஜ வாகனா
சரணம் சரணம் ஐயப்பா!
சுகுண விலாசா சுந்தர ரூபா சரணம் சரணம் ஐயப்பா!

ஆறு வாரமே நோன்பிருந்தோம்
பேரழகா உனைக்காண வந்தோம்...
ஐயப்பா..ஐயப்பா...
பாலபிஷேகம் உனக்கப்பா...
இந்த பாலனைக் கடைக்கண் பாரப்பா...

முத்திரைத்தேங்காய் உனக்கப்பா...
உன் தித்திக்கும் நாமம் எனக்கப்பா...
கற்பூர தீபம் உனக்கப்பா...
உந்தன் பொற்பத மலர்கள் எனக்கப்பா...

தேவன் பாதம்... தேவி பாதம்... 
சேவடி சரணம் ஐயப்பா!
நாவினில் தருவாய் கீதமப்பா...
தேவை உன் திரு பாதமப்பா...

நெய்யபிஷேகம் உனக்கப்பா...
உன் திவ்ய தரிசனம் எனக்கப்பா...
தையினில் வருவேம் ஐயப்பா...அருள் செய்யப்பா... மனம் வையப்பா...

(பகவான் சரணம்...)