ஓம் ஓம் ஐயப்பா...


ஓம் ஓம் ஐயப்பா...


ஓம் ஓம் ஐயப்பா
ஓம் குரு நாதா ஐயப்பா (ஓம்)

இருமுடி தாங்கி வந்தோமோ
குருவின் துணையால் வென்றோமே

தடை பல தாண்டி வந்தோமே
சரணம் என்றே சொன்னோமே (ஓம்)

படிகளை கடந்து வந்தோமே
பல படி உயர்ந்திட கண்டோமே

மறுபடி மறுபடி வருவோமே
உன் திருவடியே துணை என்போமே

சத்திய தெய்வம் நீயப்பா
உன் சன்னதி வருவோம் ஐயப்பா

அற்புத உருவே நீயப்பா
உன் அருள் பெற வந்தோம் பாரப்பா (ஓம்)

பகலும் இரவும் நீதானே
தினமும் உன்னை பணிவோமே

நெய் தருவோமே பகவானே
நித்தம் ஏற்று அருள்வாயே

அற்புதம் யாவையும் நீகாட்டு
அடியவர் வாழ்வில் விளக்கேற்று

கற்பக ஜோதி உன் வடிவம்
நீ கடைக்கண் பார்த்தால் மனம் குளிரும் (ஓம்)

ஐந்து மலையாளும் அரசே வா
அச்சன் கோயில் வீரா வா

ஆரியங்காவின் ஐயா வா
குளத்துப்புழையின் கண்ணா வா

பூதப்படையுடன் மன்னா வா
எதிரிகள் கொட்டம் அடக்கிட வா

எமபயம் போக்கும் ஐயா வா
இருகரம் கூப்பி அழைத்தோம் வா (ஓம்)

சாமியே சரணம் ஐயப்பா...சரணம் சரணம் ஐயப்பா...
சாமியே சரணம் ஐயப்பா...சரணம் சரணம் ஐயப்பா...