காடுமலை கடந்து வந்தோம்...


காடுமலை கடந்து வந்தோம்...


ஐயப்பா... சாமி ஐயப்பா...
சரணம் ஐயப்பா...சாமி ஐயப்பா...

காடுமலை கடந்து வந்தோம் ஐயப்பா...
உன்னை காண நாங்கள் ஓடி வந்தோம் ஐயப்பா...

மாய வீடுதனை மறந்து வந்தோம் ஐயப்பா...
சபரி வீடுதனை தேடி வந்தோம் ஐயப்பா...

நெய்யபிஷேகம்...பாலபிஷேகம்...தேனபிஷேகம் சாமிக்கே...
சந்தனம் பன்னீர் அபிஷேகம் எங்கள் ஐயப்ப சாமிக்கே...

காடுமலை கடந்து வந்தோம் ஐயப்பா...
உன்னை காண நாங்கள் ஓடி வந்தோம் ஐயப்பா...

ஏட்டினிலே எழுத வைத்தாய் ஐயப்பா...
எங்கள் பாட்டினிலே எழுந்து வந்தாய் ஐயப்பா...

நாங்கள் பேட்டை துள்ளி ஆடும் போது ஐயப்பா...
நீ ஆட்டம் ஆடி வந்திடுவாய் ஐயப்பா....

காடுமலை கடந்து வந்தோம் ஐயப்பா...
உன்னை காண நாங்கள் ஓடி வந்தோம் ஐயப்பா...

நீலவிழி கண்ணனுக்கும் நீறணிந்த ஈசனுக்கும் பாலகனாய் அவதரித்த ஐயப்பா...
வேலவனின் அருமைத்தம்பி... காலமெல்லாம் உனை வேண்டி
நீலிமலை சபரிமலை ஏறிவந்தோம் ஐயப்பா...

காடுமலை கடந்து வந்தோம் ஐயப்பா...
உன்னை காண நாங்கள் ஓடி வந்தோம் ஐயப்பா...

மணிகண்டா உன் கருணை அமுதமப்பா...
உன் புன்னகையில் புவனமெல்லாம் மயங்குதப்பா...
மின்னும் காந்த மலையில் ஜோதி தெரியுதப்பா...
சபரி மன்னவனே உன் மகிமை புரியுதப்பா...

நெய்யபிஷேகம்...பாலபிஷேகம்...தேனபிஷேகம் சாமிக்கே...
சந்தனம் பன்னீர் அபிஷேகம் எங்கள் ஐயப்ப சாமிக்கே...

காடுமலை கடந்து வந்தோம் ஐயப்பா...
உன்னை காண நாங்கள் ஓடி வந்தோம் ஐயப்பா...

ஐயப்பா... சாமி ஐயப்பா...
சரணம் ஐயப்பா...சாமி ஐயப்பா...