அச்சன் கோவில் அரசே...


அச்சன் கோவில் அரசே...

00:00 00:00

spaceplay / pause

qunload | stop

ffullscreen

shift + slower / faster

volume

mmute

seek

 . seek to previous

126 seek to 10%, 20% … 60%


அச்சன் கோவில் அரசே... என் அச்சம் தீர்க்க வா...
பச்சை மயிலேறும் பன்னிரு கையன் சோதரா...

சாமி பொன் ஐயப்பா... சரணம் பொன் ஐயப்பா...
சபரிகிரி நாயகனே...சரணம் ஐயப்பா...

(அச்சன் கோவில் அரசே...)

இச்சை கொண்டேன் உந்தன் மேல் ஈஸ்வரன் மைந்தா...
பச்சை வண்ணன் பரந்தாமன் மகிழும் செல்வோம்...

(சாமி பொன் ஐயப்பா...)

ஆரியங்காவில் வாழும் ஆண்டவனே வா...
பார்வதியாள் அகம் மகிழும் பாலகனே வா...

எருமேலி வீற்றிருக்கும் இறைவனே நீ வா...
தர்ம ஞான சாஸ்தாவே தயவுடனே வா...

மறைவேடும் சபரிமலை மன்னனே நீ வா...
குறை தீர்க்கும் குளத்துப்புழை பாலனே நீ வா...

மன்னவனே...மணிகண்டனே...மகிழ்வுடனே வா...
வன்புலி மேல் காட்சிதரும் வள்ளலே நீ வா...

தேவர்களும் உனைப்பணிய காந்தமலையிலே...
நீ ஆவலுடன் காட்சி தந்தாய் ஜோதி உருவிலே...

காவலனே கண்ணார கண்டோமே ஜோதி தனை
நாவார உனை அழைத்தோம்...சுவாமியே.... சரணம் ஐயப்பா....

சாமி பொன் ஐயப்பா... சரணம் பொன் ஐயப்பா...
சபரிகிரி நாயகனே...சரணம் ஐயப்பா...