மதுரை மீனாட்சி அம்மனை வைரக் கிரீடத்தில் எப்போது தரிசிக்கலாம்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22அக் 2021 04:10
* மதுரை மீனாட்சியை மாணிக்க மூக்குத்தியுடன் தரிசிப்பது சிறப்பு. வைரக் கிரீடத்துடன் அம்மனை தமிழ்ப்புத்தாண்டு, ஆங்கிலப்புத்தாண்டு, தை அமாவாசை நாட்களில் தரிசிக்கலாம். * ஆனி பவுர்ணமியன்று மீனாட்சியம்மனுக்கு உச்சிக்கால பூஜையில் முக்கனிகளான மா, பலா, வாழைப்பழ அபிஷேகம் செய்வர். * மீனாட்சி சன்னதி எதிரிலுள்ள கோபுரம் சிற்ப வேலைப்பாடுகளுடன் இருப்பதால் ‘சித்திர கோபுரம்’ எனப்படுகிறது. இந்த கோபுரத்திலுள்ள 25 முகம் கொண்ட சதாசிவம் சிற்பம் அற்புதமானது. * பொற்றாமரைக்குளத்தின் வடக்கு கரையில் உள்ள துாண்களில் மதுரை நகரை நிர்மாணித்த மன்னர் குலசேகர பாண்டியன், வணிகரான தனஞ்செயன் ஆகியோரின் சிலைகள் உள்ளன.