காரைக்கால் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் கருட சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜன 2025 11:01
காரைக்கால்; திருமலைராயன்பட்டினத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பெருமாள் கருட சேவையில் வீதியுலா நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில். திருப்பதிக்கு நிகரான ஆலயமாக கருதப்படும் இவ்வாலயம் பல நூற்றாண்டுகள் பழமையானது. இவ்வாலயத்தில் ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நேற்று வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ஸ்ரீதேவி,பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள் தேவியருடன் பரமபத வாசல் வழியாக எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி 04 மாட வீதிகளில் வீதியுலாவாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.முன்னதாக கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனையும்,மகாதீபாராதனையும் சிறப்பாக நடைபெற்றது.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.