பதிவு செய்த நாள்
08
ஜன
2022
07:01
9 - 1 - 2022 மார்கழி மாதம் 25ம் நாள் வளர்பிறைசப்தமி திதியும், ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து வரும் நாள் பானு சப்தமி. சூரியனின் புதல்வரான சனீஸ்வர பகவான் ஈஸ்வர பட்டம் பெற்றவுடன் ஈஸ்வரனை வணங்கிவிட்டு, தினமும் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பிரபஞ்சத்தை வலம் வரும் சூரியத் தேரை ஓட்டுகின்ற அருணன் ஞாயிறும் சப்தமியும் கூடும் பானுசப்தமி நாளில் சனிபகவான் தனது பெற்றோர்களான சாயா தேவி சமேத சூர்ய மூர்த்திக்கு பாத பூஜை செய்து சாஷ்டங்கமாக வீழ்ந்து வணங்கி பூஜித்தார். ஆகவே நீங்கள் இன்று விரதம் இருந்து சூரியனை பூஜித்தால் ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி பாதிப்பு நீங்கி சனீஸ்வரன் அருள் புரிவார்.
சூரிய குலத்தைச் சேர்ந்த ஸ்ரீராமர், பானு சப்தமி நாட்களில் ஸ்ரீமன் சூரிய நாராயண விஷ்ணு ஸ்வாமிக்கான பூஜைகளைச் சூரிய மண்டலத்தில் விஸ்தாரமாக நடத்திப் பூஜிக்கின்றார். ஸ்ரீராமர் பானு சப்தமி நாட்களில், 108 சிவலிங்க மூர்த்திகளுக்கு பூஜைகளை நடத்தி ஸ்ரீமத்சூரிய நாராயண மூர்த்தியின் திருஅருளைப் பூவுலகிற்கு பெற்றுத் தருகிறார். ஸ்ரீராமர் பானு சப்தமி நாளில் சிவ பூஜை ஆற்றிய தலமே கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் 108 சிவாலயம் ஆகும். இங்கு உள்ள சூரிய மூர்த்தி மிகவும் சக்தி வாய்ந்தவர். பானு சுதாகரர் என்ற நாமம் தாங்கி தினமும் 108 சிவலிங்க பூஜைகளை ஆற்றி, நவகிரகங்களில் முக்கியமானவராக ஆகும் பேற்றைப் பெற்றார். பானு என்றால் சூரியன் பானுசப்தமி ஆயிரம் சூரியகிரணங்களுக்கு சமமான நாள். இன்று ஒரு நாள் பித்ரு தர்பணம் செய்வது 1000 சூரிய கிரகணம் முடிந்ததும் நாம் செய்த பித்ரு தர்பணத்திற்கு சமம். இந்த நாளில் சூரிய நமஸ்காரம் செய்வது, காயத்திரி மந்திரம் ஜபம் செய்வது, சூரிய ஸ்தோத்திரங்கள் படிப்பது 1000 மடங்கு பலன் தர வல்லது. கோதுமையால் செய்த இனிப்பு பிரசாதத்தை காலை 6 to 7 மணிக்குள் வெட்ட வெளியில் சூரியனுக்கு படையலிட்டு சூரியனை வழிபடுவது நீண்ட நாட்களாக நோய்வாய்பட்டு கஷ்டப்படுபவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தைக் தரவல்லது. அவர்கள் பானு சப்தமி அன்று சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் நல்லது.இந்த நாளில் முன்னோர் வழிபாடு செய்ய பலவிதமான தோஷங்கள் நீங்கும். பித்ரு சாபம், பித்ரு தோஷம், முன்னோர் சாபம் அனைத்தும் நீக்கி நம்மை தர வல்லது. ஞாயிறுக்கிழமை அதிகாலை எழுந்து காலை 6-7 மணிக்குள் சூரியனை வழிபட்டால் புகழ் கூடும். உடல் ஆரோக்கியம் நலமடையும்.