மதுரை மீனாட்சி அம்மன் நவராத்திரி விழா : அம்மன் அலங்கார விபரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2022 09:09
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வரும் 26 முதல் அக்., 5 வரை நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.உற்சவ நாட்களில் தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை அம்மன், மூலஸ்தான சன்னதியில் திரைபோட்டு அபிஷேகம், அலங்காரமாகி கல்பபூஜை, சகஸ்ரநாம பூஜை போன்ற விசேஷ பூஜைகள் நடக்கும்.
ஒன்பது நாட்களும் விதவிதமான அலங்காரங்கள் செய்யப்படும்.உற்சவ நாட்களில் திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை ஆன்மிக சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும்.
26.09.2022 - திங்கள் - இராஜராஜேஸ்வரி 27.09.2022 - செவ்வாய் - கோலாட்டம் 28.09.2022 - புதன் - அருள்மிகு மீனாட்சி பட்டாபிஷேகம் 29.09.2022 - வியாழன் - தக்ஷிணாமூர்த்தி 30.09.2022 - வெள்ளி - ஊஞ்சல் 01.10.2022 - சனி - அர்த்தநாரீஸ்வரர் 02.10.2022 - ஞாயிறு - தண்ணீர் பந்தல் அமைத்தல் 03.10.2022 - திங்கள் - மகிஷாசுரமர்த்தினி 04.10.2022 - செவ்வாய் - சிவபூஜை 05.10.2022 - புதன் - விஜயதசமி - சடை அலம்புதல் - சுவாமி அம்பாள் சேர்த்தி சேவையில் அம்மன் அருள்பாலிக்கின்றனர்.