கஸ்யப முனிவருக்கும், வினதைக்கும் மகனாகப் பிறந்தவர் கருடன். பறவைகளின் அரசனான கருடனுக்கு ‘பட்சி ராஜன்’ என்று சிறப்பு பெயருண்டு. வினதையின் மகன் என்பதால் ‘வைநதேயன்’ என்றும் அழைப்பர். இவரது அவதரித்த பட்சராஜர் திருநட்சத்திரம் இன்று கொண்டாடப்படுகிறது. இன்று பெருமாள் கோயிலில் நெய்தீபம் ஏற்றினால் எதிரி தொல்லை மறையும். திருமணமான பெண்கள் கருடாழ்வாருக்கு துளசி மாலை சாத்தி வழிபட்டால் சுமங்கலி பாக்கியம் உண்டாகும். விஷப்பூச்சிகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள விவசாயிகள் இவரை வழிபடுகின்றனர். பெருமாளின் வாகனமான கருடனுக்கு நெய்தீபம் ஏற்றி வணங்க பணவரவு கிட்டும்.