Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுராந்தகம் திருவெண்காட்டீஸ்வரர் ... கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் திருக்கல்யாணம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வண்டலுார் லட்சுமி குபேர தியான மண்டபம் கும்பாபிஷேகம் விமரிசை
எழுத்தின் அளவு:
வண்டலுார் லட்சுமி குபேர தியான மண்டபம் கும்பாபிஷேகம் விமரிசை

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2025
11:06

வண்டலுார்: வண்டலுார் அடுத்த ரத்தினமங்கலத்தில், லட்சுமி குபேர சுவாமி தியான மண்டபத்தின் மஹா கும்பாபிஷேகம் நேற்று காலை விமரிசையாக நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் தாலுகா, ரத்தினமங்கலம் கிராமத்தில், லட்சுமி குபேரரை மூலவராக வைத்து, உலகின் முதல் கோவில் 2003ம் ஆண்டு கட்டப்பட்டது. இக்கோவிலில் அறுபடை முருகனுடன் வீற்றிருக்கும் செல்வமுத்து குமரன், பக்த ஹனுமன் மற்றும் 16 வகை ஷோடச கணபதி, நவக்கிரகங்களும் துணைவியருடன் உள்ள சன்னிதிகளும் உள்ளன. பக்தர்கள் வேண்டிய கோரிக்கைகள் நிறைவேறியதால், அப்பகுதிவாசிகள் மற்றும் சுற்றுப்புற மக்களின் இஷ்ட கோவிலாக லட்சுமி குபேர தியான மண்டபம் மாறியது.இதையடுத்து, 2012ல் கோவில் புனரமைக்கப்பட்டு, 2013 டிச., 6ம் தேதி மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில், அய்யப்பன், அதிர்ஷ்ட தேவி, ஸ்வர்ண கவுரி, சிரிக்கும் புத்தர் மற்றும் பரிவார தேவதைகள் உள்ளிட்ட உட்புற சன்னிதிகளில், 2024ல் புனரமைப்பு பணிகள் துவக்கப்பட்டு, கடந்த மாதம் முடிவடைந்தன. இதையடுத்து, கடந்த 4ம் தேதி காலை 9:05 மணிக்கு அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, கணபதி ஹோமத்துடன், கோவில் கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் துவக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று காலை 5:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள் துவக்கப்பட்டு, காலை 8:20 மணிக்கு லட்சுமி குபேரர் மற்றும் பரிவார கோவில் கலச விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடந்தது. இதில், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு 2,000 லிட்டர் பாலாபிஷேகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- ராமநவமியையொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி : ராம நவமியை முன்னிட்டு திருமலையில்  ஸ்நபன திருமஞ்சனம் எனும் புனித நீராட்டு வைபவம் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டங்குளங்கரா ஸ்ரீதேவி கோவிலில் ஆண்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar