Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சந்திர தரிசனம், அக்னி நட்சத்திரம் ... சதுர்த்தி விரதம், கதளி கவுரி விரதம்; அருகம்புல் சாத்தி விநாயகரை வழிபட அனைத்தும் கிடைக்கும்! சதுர்த்தி விரதம், கதளி கவுரி விரதம்; ...
முதல் பக்கம் » துளிகள்
திருவாதிரை விரதம், ரம்பா திரிதியை; நடராஜரை தரிசித்து நலம் பெறுவோம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவாதிரை விரதம், ரம்பா திரிதியை; நடராஜரை தரிசித்து நலம் பெறுவோம்!

பதிவு செய்த நாள்

29 மே
2025
10:05

நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் இருப்பவர் சிவன். திருவாதிரை நடராஜருக்குரிய சிறப்பான விரதநாள் ஆகும். நட்சத்திரங்களில் ‘திரு என்ற அடைமொழியோடு வருவது ஆதிரை மற்றும் ஓணம் மட்டுமே. ஆடல்வல்லானின் ஆட்டத்தாலேயே அண்டசராசரங்களும் இயங்குகின்றன. முருகப்பெருமான் திருவாதிரை விரதம் இருந்து ஈசனின் அருள்பெற்றார். சுவாமிக்கு களி, தயிர்ச்சாதம், சுண்டல் நிவேதனம் செய்வது சிறப்பு. சிவாலயம் சென்று நடராஜரின் தாண்டவ தீபாராதனை தரிசிக்க வேண்டும். வீட்டில் சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். மாதந்தோறும் திருவாதிரை விரதமிருந்து கயிலாயத்தில் வாழும் பேறு பெறுவோம்..!

இன்று அனைத்து சிவாலயங்களிலும் நடராஜருக்கு திருமஞ்சனம் நடக்கும். வீட்டில் சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும்.


ரம்பா திரிதியையான இன்று அம்மனை வழிபட அதிர்ஷ்டயோகமும் உண்டாகும். ரம்பை செய்த கவுரி விரத பூஜை: அம்பிகை கவுரி தேவியை வணங்கி விட்டு, கலசத்தில் ஆவாகனம் செய்து மஞ்சளால் பிரதிமை செய்து, அலங்கரித்து முறையாக விரதமிருந்து பூஜை நடத்தினாள். மங்களகரமான பொருட்களோடு மஞ்சளால் சிலை செய்து வழிபட்டதால், இது கார்த்திகை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் இரண்டாவது நாள், திந் திரிணீ கவுரி விரதம் எனப்படுகிறது. ரம்பையின் பூஜையில் மகிழ்ந்த கவுரி தேவி, மறுநாள் காலை உதயகாலத்தில் அழகன் முருகனைக் (கார்த்திகேயனை) மடியில் வைத்தபடி கார்த்தியாயினியாகக் காட்சி தந்தாள்.


ரம்பையே. நீ வேண்டும் வரத்தைக் கேட்பாயாக என்றதும், தன் அழகிப் பட்டம் திரும்ப வந்து சேர வேண்டும், அழகுடன் மிளிர வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். ரம்பை கேட்டபடியே தேவலோக அழகிப் பட்டம் திரும்பப் பெற்றிட ஆசி வழங்கிய பின், பொன்னும், மணிகளும் அளித்து வசீகரமான முக அழகையும் கொடுத்து வாழ்த்தி விட்டு இன்றுமுதல் இந்தத் திருதியை தினம் ரம்பா திருதியை என்று உன் பெயரால் பெண்கள் கொண்டாடக்கூடிய தங்கத் திருநாளாக ஆகட்டும் என்று அறிவித்தாள். இதுவே ரம்பா திருதியை உருவான திருக்கதை.


பெண்களுக்கு அழகும் முகவசீகரமும், தங்க நகை சேரும் பாக்கியமும் கிடைக்கும். பரத நாட்டியம், மற்ற ஆடல் கலைகளில் மிளிர்ந்திட, இந்த நாளில் கவுரி பூஜையுடன் ரம்பாதேவி பூஜையும் செய்யவேண்டும். புதிதாக சிறிதளவு நகை வாங்கி பூஜை செய்து அணிபவர்கள், அருகில் உள்ள அம்மன் சன்னதிகளுக்குச் சென்று அம்மன் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து வீட்டுக்கு வந்து ஆரத்தி செய்த பிறகு அணிதல் வேண்டும். அன்னை கவுரிதேவி காட்சி தந்து ஆசீர்வாதம் செய்த படியால், தாயை வணங்கித் தெய்வமாக வழிபடுவதால் நமக்கு மகதைச்வர்யங்கள் அனைத்தும் கிடைக்கும் என்று இந்த பூஜா விதியில் சொல்லப்பட்டுள்ளது.  ஸ்வர்ணாம்பிகா பஞ்சகம் என்ற தங்கம் சேர்க்கும் துதியை படித்து சப்தமுகீ என்னும் ருத்ராட்சத்தை வழிபடுவோருக்கு பொன் பொருள் சேர்கின்ற அதிர்ஷ்டயோகமும் உண்டாகும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பெங்களூரில் வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பஞ்சம் இல்லை. ஒவ்வொரு பகுதியிலும், புராதன ... மேலும்
 
temple news
பாகல்கோட் மாவட்டம், பாதாமி பகுதியில் மலேகட்டி சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் சாளுக்கியர் களால் கி.பி., ... மேலும்
 
temple news
பெங்களூரில் இருந்து துமகூரு செல்லும் சாலையில் நெலமங்களா டவுன் அரிசினகுன்டே பகுதியில் ஸ்ரீவிஸ்வரூப ... மேலும்
 
temple news

புகழ் பெற வேண்டுமா செப்டம்பர் 28,2026

நரசிம்மர், கருடன், பெரியாழ்வார் மூவருக்குரிய நட்சத்திரம் சுவாதி. ஸ்ரீவில்லிபுத்துாரிலில் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
ஓம் அனுமனே போற்றிஓம் அஞ்சனை மைந்தனே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அவதார புருஷனே போற்றி ஓம் அறிஞனே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar