Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவிலில் ... திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக நேரம் அறிவிப்பு திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2025
10:06

மறைமலை நகர்; பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில், வைகாசி மாத தேரோட்டம் விமரிசையாக நடந்தது. சிங்கபெருமாள் கோவில் –- அனுமந்தபுரம் சாலையில், அகோபிலவல்லி தாயார் சமேத பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோத்சவம் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான பிரம்மோத்சவத்திற்கு, கடந்த 31ம் தேதி கொடி ஏற்றப்பட்டது. கடந்த ஆறு நாட்களாக சூர்ய பிரபை, சந்திர பிரபை, யாளி வாகனம், யானை வாகனத்தில் உற்சவர் பிரகலாத வரதர் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார். முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று விமரிசையாக நடந்தது.அதிகாலை உற்சவர் பிரகலாதவரதர், ஸ்ரீதேவி, பூதேவியருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 6:30 மணிக்கு, சுவாமி தேரில் எழுந்தருளினார். 7:00 மணிக்கு தேரின் வடம் பிடித்து, பக்தர்கள் இழுத்துச் சென்றனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பி, பக்தி பரவசமடைந்தனர். மங்கல வாத்தியங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் நான்கு மாட வீதிகளில் வலம் வந்த தேர், காலை 11:30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. இந்த தேரோட்டத்தில், சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இதில் கூடுவாஞ்சேரி சரக உதவி ஆணையர் தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar