பதிவு செய்த நாள்
27
அக்
2023
10:10
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும், 28 மற்றும், 29 ம் தேதி பவுர்ணமி கிரிவலம் வர, உகந்த நேரம் என்றும், 28 ல் கோவிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, 3 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும், கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலையிலுள்ள மலையை, பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபட்டு வரும் நிலையில், மலையை கிரிவலம் சென்று, ஏராளமானோர் தினமும் வழிபட்டு செல்கின்றனர். இதில், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் சென்று வழிபட்டு வருகின்றனர். இவ்வாறு, ஐப்பதி மாத பவுர்ணமி திதி, வரும், 28 ல் அதிகாலை, 4:00 மணி முதல், 29 ல் அதிகாலை, 2:27 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எனவும், இந்த, 2 நாட்களிலும், கோவிலில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும், எவ்வித தரிசனத்திற்கும் முன்னுரிமை வழங்கப்படாது எனவும், கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 28 ம் தேதி அனைத்து சிவன் கோவில்களிலும் நடக்கும் அன்னாபிஷேக விழா, அருணாசலேஸ்வரர் கோவிலிலும் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு அன்று மாலை, 3:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை சுவாமி தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. மாலை, 6:00 மணிக்கு மேல், தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.