தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா தீர்த்தவாரியுடன் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2025 03:04
இளையான்குடி; தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த 10 நாள்களாக நடைபெற்ற பங்குனி பொங்கல் விழா இன்று இரவு தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது.
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா வருடம் தோறும் 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.இந்த வருடத்திற்கான விழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களின் போது அம்மன் தினம்தோறும் பல்வேறு அலங்காரங்களில் சிம்மம், அன்னம்,கமலம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பொங்கல் விழா 5ம் தேதியும்,6ம் தேதி மின் அலங்கார தேர்பவனியும்,நேற்று காலை பால்குடமும், இரவு 8:30 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும், இரவு 10:30 மணிக்கு பூ பல்லாக்கு நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனை தரிசனம் செய்தனர். இன்று இரவு தீர்த்தவாரியுடன் இந்தாண்டிற்கான திருவிழா நிறைவு பெறுகிறது.