ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை; தரிசித்தால் மகிழ்ச்சியான வாழ்வு அமையும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2025 02:04
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் ஆறாம் திருநாளில் உறையூர் கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சிறப்பு சேவை நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் 6ம் நாளான இன்று அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தங்கப் பல்லக்கில் புறப்பட்டு, காவேரியை கடந்து உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலுக்கு முற்பகல் வந்தடைந்தார். அங்கு சேர்த்தி மண்டபத்தில் பிற்பகல் முதல் நள்ளிரவு வரை கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை சாதிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாள் வழிபட்டனர். தொடர்ந்து, அங்கிருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை சென்றடைகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வரும் 12ம் தேதி நடைபெறுகிறது. ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலில், நம்பெருமாள் மற்றும் தாயார் ஒருசேர தரிசனம் தருவது சேர்த்தி சேவை எனப்படுகிறது. தாயாரையும், பெருமாளையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது ஐதீகம்.