பதிவு செய்த நாள்
08
ஏப்
2025
02:04
அயோத்தி; அயோத்தி கோயிலில் குழந்தை ராமர் சிலை உள்ள நிலையில், கோயிலின் முதல் தளத்தில் மன்னர் ராமர் சிலையை வைக்க ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராமர் தர்பாருடன், சிலை நிறுவும் நிகழ்ச்சி அடுத்த மாதம் நடைபெற உள்ளது!.
அயோத்தியின் ராமர் கோயில் மே மாதத்தில் மற்றொரு கும்பாபிஷேக நிகழ்வை காண தயாராகி வருகிறது. அயோத்தியில் ராம் லல்லாவின் "பிரான் பிரதிஷ்டை" விழா கோலாகலமாக நடைபெற்றது. கடந்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிரமாண்டமான நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோயில் வளாகத்தின் கட்டுமானப் பணிகள் இந்த மாத இறுதிக்குள் நிறைவடையும் என்றும், மீதமுள்ள "பர்கோட்டா" அல்லது சுற்றுச்சுவர் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்றும் மிஸ்ரா கூறினார்.
இது குறித்து கோயில் கட்டுமானக் குழு தலைவர் மிஸ்ரா கூறியதாவது; கோயிலில் சுமார் 20,000 கன அடி கல் இன்னும் பதிக்கப்படவில்லை. கோயில் கட்டுமானப் பணிகள் ஏப்ரல் 15ம் தேதிக்குள் நிறைவடையும். கோயிலில் உள்ள அனைத்து சிலைகளும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் இங்கு வந்துவிடும், மேலும் கிட்டத்தட்ட அனைத்தும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் நிறுவப்படும். ராமர் பிறந்த இடத்தில் குழந்தையாக இருந்த ராம் லல்லாவின் 51 அங்குல உயர சிலை கர்நாடக கலைஞர் அருண் யோகிராஜால் செதுக்கப்பட்டது. ஜெய்ப்பூரில் உள்ள சிற்பி பிரசாந்த் பாண்டே தலைமையிலான 20 பேர் கொண்ட குழுவால் ராம் தர்பார் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. இது வெள்ளை மக்ரானா பளிங்குக் கல்லால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ராமசரிதமானஸ் ஆசிரியர் துளசிதாசரின் பிரமாண்டமான சிலையும் இந்த வளாகத்தில் நிறுவப்படுகிறது. இயற்கையுடன் இணக்கமாக இருக்க சுமார் 20 ஏக்கர் நிலம் அழகுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.