Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ராமானுஜர் ரத யாத்திரை! உலக அதிஷ்டமா? ஆபத்தா?: ஒரு ஆய்வு! உலக அதிஷ்டமா? ஆபத்தா?: ஒரு ஆய்வு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எதற்கு இந்த குறிப்பிட்ட தேதிக்கு இவ்வளவு மவுசு?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 டிச
2012
15:59

எதற்கு இந்த குறிப்பிட்ட தேதிக்கு இவ்வளவு மவுசு? அது, 12.12.12 என்பதால் தான். அதாவது, டிசம்பர் மாதம், 12ம் தேதி, 2012ம் ஆண்டு இந்த, 12.12.12 மிக அதிர்ஷ்டமான தேதி. அது ஆயிரம் ஆண்டுகளுக்கு, 12 முறை மட்டுமே வரும்.

பன்னிரண்டு என்ற எண்ணுக்கு, பல மகத்துவங்கள் உண்டு. ஆண்டுக்கு, 12 மாதங்கள். ராசிகளின் எண்ணிக்கை, 12. ஒரு  டஜன் என்றால் எவ்வளவு? 12 தானே! கடிகாரத்தை பாருங்கள், 12 என்ற எண் வரை எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கும். பன்னிரண்டு, ஆறு, நான்கு, மூன்று, இரண்டு ஆகிய அத்தனை எண்களாலும் பின்னம் இல்லாமல் வகுபடும் சிறிய எண் 12 தான். அவ்வப்போது, இது போன்ற தினங்கள் குறித்து, (10.10.10 - 11.11.11 போன்று) பரபரப்போடு ஒரு பயமுறுத்தல் எப் போதும் எழுப்பப் படுவது வழக்கம். 12.12.12 அன்று உலகம் அழிந்து விடும் என்று, இப்போதும் சிலர் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

மேற்கத்திய ஜோதிடர்கள் கூறுவது இதைத்தான் 12.12.12  அன்று தொடங்கும் உலக அழிவு, டிச., 21, 2012 அன்று அந்த அழிவு முழுமையடைந்து, உலகமே காணாமல் போகும். அதாவது டிசம்பர் 21, 2012 அன்று சூரியன் பால்வெளி வீதிமண்டலத்தின் மையத்துக்கு மேல் உயரும். இதனால், உலகம் அழியலாம். இந்திய ஜோதிடர்கள், இப்போது நடப்பது கலியுகம் என்கின்றனர். இந்த யுகத்தின் முடிவு என்பது உலகின் அழிவு என்றும் கூறுகின்றனர். அதாவது, கலியுகத்தின் முடிவில், யுக புருஷன் குதிரையில் தோன்றுவான். வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றத்தினால் உலகம் அழிந்துவிடும் என்கின்றனர். இதற்கு முந்தைய யுகங்கள், எத்தனை வருடங்கள் கொண்டவையாக இருந்தன என்று பார்ப்போம். சத்ய யுகம் என்பது, 17,28,000 ஆண்டுகள் கொண்டதாகவும், திரேதா யுகம் என்பது, 12,96,000 ஆண்டுகள் கொண்டதாகவும், துவாபர யுகம் என்பது, 8,64,000 ஆண்டுகள் கொண்டதாகவும் இருந்தது. கலியுகம் என்பது, 4,32,000 ஆண்டுகள் கொண்டது என்கின்றனர். கலியுகம் பிறந்தது, கி.மு., 3102 அன்று. அப்படிப் பார்த்தால், இதுவரை, 5114 ஆண்டுகள் தான் முடிவடைந்துள்ளன. இன்னமும், 4,26,886 ஆண்டுகள் பாக்கி உள்ளன.

செவ்வாய் மற்றும் சூரியனால் கட்டுப்படுத்தப்படும் நாடுகள், சுனாமி, புயல், நிலநடுக்கம், எரிமலை ஆகியவற்றால், 12.12.12 அன்று பாதிக்கப்பட வாய்ப்பு உண்டாம். இது போன்ற நாடுகள், பெரும்பாலும் தீவுப் பகுதிகளாக உள்ளன. ஆஸ்திரேலியா, இலங்கை ஆகியவை கூட அழிவை சந்திக்கலாம் என்கின்றனர். அமெரிக்காவின் பழங்குடி இனத்தவரிடையே வாய் மொழியாக நிலவி வரும் ஒரு காலண்டர், மிகவும் நீண்ட காலத்தை கொண்டது. 5125 ஆண்டுகள் கொண்ட, இந்த காலண்டரின் இறுதி நாள், 12.12.12. இப்படி யூகங்கள் கொடி கட்டிப்பறக்கின்றன. நிபுரு என்ற கிரகத்தின் மீது, பூமி அன்று மோதப்போகிறது என்பதிலிருந்து, அன்று கொத்து கொத்தாக கோடிக்கணக்கான மக்கள்  உலக வாழ்க்கையை துறந்து, ஆன்மிகத்தில் ஈடுபடப் போகின்றனர் என்பது வரை, பலவித பயமுறுத்தல்கள் உலவுகின்றன.

இதை பற்றியெல்லாம் கவலைப்படாமல், புதிய தோஹா சர்வதேச விமான நிலையம், அன்றுதான் திறக்கப்பட உள்ளது. கத்தார் நாட்டில், ஒரே சர்வதேச விமான நிலையமாக இது விளங்கப் போகிறது. அடுத்த,  2013ல் தான் உலக அரேபிய பந்தய குதிரை போட்டிகள் மாநாடு பிரான்சில் நடத்தப்பட உள்ளது. ஆனால், இதை அதிகாரப்பூர்வமாக அவர்கள் அறிவிக்கப்போவது, 12.12.12 அன்றுதான். அமெரிக்காவில் ஒரு விபரீதம் நடக்க வாய்ப்புண்டு என்று விஞ்ஞானிகளே பதறுகின்றனர். அங்குள்ள பத்து லட்சம் நாய்களின் உடலில், ஹார்ட் வோர்ம் எனப்படும் புழு பரவி, உள்ளன. இது பெரும் தொற்றுநோயாக பரவி, அமெரிக்கர்களை பாதிக்க வாய்ப்புண்டு. எனவே, 12.12.12 என்ற பெயரில், ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். மேற்படி பாதிப்பை தடுக்கும் வகையில், 12 டோஸ் தடுப்பு மருந்தை, 12 சதவீதம் பேருக்கு,  2012க்குள் அளிக்க இருக்கின்றனர். எப்படியோ, பலவித பயமுறுத்தல்களுக்கான விடை, 13.12.12 அன்று கிடைத்துவிடும்!

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா மகா தரிசன உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple
சபரிமலை: சபரிமலையில், வரும், 27-ம் தேதி மண்டலபூஜை நடைபெறுகிறது. இதையொட்டி, ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் ... மேலும்
 
temple
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் மார்கழியை முன்னிட்டு டிச.,16 முதல் ஜன., 14 வரை ... மேலும்
 
temple
திருப்பதி: திருச்சானுாரில் உள்ள பத்மாவதி தாயாருக்கு, வருடாந்திர புஷ்ப யாகத்தை முன்னிட்டு, 3 டன் ... மேலும்
 
temple
திண்டிவனம்: பெங்களூரு பகுதிக்கு, கார்கோ லாரியில் எடுத்து செல்லப்பட்ட, 64 அடி உயர சுவாமி சிலை, திண்டிவனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.