கோவில் திரும்பிய சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மனுக்கு சிறப்பு வரவேற்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07அக் 2025 10:10
சுசீந்திரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவிற்கு சென்றிருந்த சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழா முடிந்து கோவிலுக்கு திரும்பும் போது போலீஸ் அணிவகுப்பு மரியாதை செய்தனர்.
திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் கலந்து கொண்டு திரும்பிய சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மனுக்கு கோவில் அணுகுசாலையில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. கேரள போலீசார் வாத்திய இசை யுடன் துப்பாக்கி ஏந்தியபடி அணிவகுப்பு மரியாதை செய்தனர். மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் பிரபாஜிராம கிருஷ்ணன், விழா குழுத் தலைவர் தலைமையில் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்த அம்மன், சுசீந்திரம் கோவிலை வந்தடைந்தது. வழிநெடுக அம்மனுக்கு திருக்கண் சார்த்து வழிபாடு நடந்தது.