மக்கள் நலன் வேண்டி எல்லை கருப்பராயன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07அக் 2025 10:10
கோவை; பாரத தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பாரத மக்களின் நலன்வேண்டி காரமடை அருகே உள்ள எல்லை கருப்பசாமி கோவிலில் 5000 பெண்கள் மட்டும் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள ஒன்னிப் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள காவல் தெய்வமான எல்லை கருப்பசாமி கோவிலில் பெளர்ணமி பூஜை நடைபெற்றது. இந்த பெளர்ணமி பூஜையில் நமது பாரத தேசத்தின் பாதுகாப்பாக இருக்கவும் பாரத தேச மக்கள் நலமுடன் வாழ வேண்டி கருப்பசாமிக்கு 5000 திருவிளக்குகள் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவில் வளாகத்தில் கருப்பசாமியின் உற்ஷவ வடிவம் அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் மூலம் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பெண்கள் மட்டும் 5000 பேர் கலந்து கொண்டு திருவிளக்கு ஏந்தி அதற்கு தேங்காய்,பழம் , மலர்கள், மஞ்சள் வைத்து அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க பொதுமக்கள் எல்லை கருப்பசாமியை வேண்டி வணங்கினர்.