Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எதற்கு இந்த குறிப்பிட்ட தேதிக்கு ... அய்யர்மலை கோவிலுக்கு ரோப்கார் வசதி செய்ய கோரிக்கை! அய்யர்மலை கோவிலுக்கு ரோப்கார் வசதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக அதிஷ்டமா? ஆபத்தா?: ஒரு ஆய்வு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 டிச
2012
10:12

12-12-12 உலக அதிஷ்ட தினமாகும் என்று, சுவாமிமலை ஸ்தபதி ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும், அவ்வாண்டின் கடைசி இலக்கத்தை வைத்து, மாதம் மற்றும் தேதியும் ஒன்றாக அமைந்தால், அந்த நாள் அவ்வாண்டின் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக எண்ணி மகிழ்வர். எந்த ஆண்டிலும் இல்லாத வகையில், 12.12.12 என, அமைந்த நாள் பல்வேறு வகையில் சிறப்பினை பெறுகிறது. எண், 12ஐ அடிப்படையாக கொண்டு அமைந்த பல நிகழ்வுகள் நம் வாழ்க்கையிலும், நமது கலாச்சாரத்திலும், இலக்கியத்திலும் அமைந்துள்ள, பல அரிய செய்திகளை, பாபநாசம் அருகே சுவாமிமலை ஸ்தபதி மோகன்ராஜ் ஆய்வு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: உலகம் முழுவதும் ஆட்சி செய்யும் ஆங்கிலமே இந்நாளுக்கு காரணமாகிறது. ஆங்கில ஆண்டே, கி.பி.,- கி.மு., என, காலத்தை நிர்ணயிக்கிறது.அவ்வகையில் ஆங்கில மாதமும், 12, புகழ்பெற்ற ஆங்கில நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர் எழுதிய புகழ்பெற்ற நாடகத்தில், ஒன்று, 12வது இரவு, அதுபோல தமிழ்வளர்த்த திருமுறைகள், 12, சிதம்பரம் சிவகாமியம்மை பற்றிய பிள்ளை தமிழ், 12, கலிங்கத்து பரணியில் சக்தியின் வடிவம், 12 விதமாக கூறப்படுகிறது. வராஹி படிம அமைதியில் காணப்படும் வகைகள், 12, சூரிய பகவான் தேரில்வர அவருக்குமுன் சாமரம் வீசிவரும் அப்சரஸ்களின் எண்ணிக்கை, 12, தேவி பாகவதத்தில் ஸ்ரீசக்கர கோட்டைகால், பித்தளை பிரஹாரத்தில் அமைந்துள்ள சக்திகளின் எண்ணிக்கை, 12, காளி தேவிக்கு ஏவல் செய்ய உடன் உள்ள யோகிகளின் எண்ணிக்கை, 12, சூரியனது சக்கரத்தில் காணப்படும் ஆரக்கால்களின் எண்ணிக்கை, 12, சிற்ப கலைக்கு புகழ்பெற்ற ஒரிசா மாநில கொணாரக் சூரியன் கோவிலில் காணப்படும் சக்கரங்களின் எண்ணிக்கை, 12.

இதற்கு முன் நாம் கடந்து வந்த ஆண்டுகள், 10.10.10., 11.11.11., என முன்னோக்கியும், இனிவரும் ஆண்டுகள், 13.13.13, 14.14.14 என, அமையாது என்பதை கருத்தில் கொண்டும், மாதம், 12 உடன் முடிவடைவதால், இந்த, 12.12.12 எவ்வாறு நமது வாழ்க்கையுடன் பிண்ணி பிணைந்துள்ளது.மேலும் ராசிகளின் எண்ணிக்கை, 12. ஒரு மனிதனின் ஜாதக அமைப்பு அடங்கும் கட்டத்தின் எண்ணிக்கை, 12, வைணவ பெருமையை உலகுக்கு எடுத்துரைத்த அந்த ஆழ்வார்களின் எண்ணிக்கை, 12, மாதங்கள், 12, பகல் பொழுது, 12, இரவு பொழுது, 12, பகல் உச்சி, 12, நடுநிசி இரவு, 12, தமிழ் உயிரெழுத்துக்கள், 12. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 உத்தரகோசமங்கை; - ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் பழமையும் புராதன சிறப்பும் பெற்ற மங்களநாதர் ... மேலும்
 
temple news
 சிதம்பரம்;   உலக புகழ் பெற்ற, பூலோக கைலாயம் என்றழைக்கப்படும், சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காட்டில் என்.எஸ்.எஸ்., யூனியனின் சார்பில் நடந்த "மெகா திருவாதிரைக்களி நடனம் மக்கள் மனதை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்சவம் இன்று சிறப்புடன் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar