லக்ஷ்மி தேவியின் வாகனம். ஆந்தை. சம்ஸ்கிருதத்தில் உல்லூகம் எனப்படும் (ஆங்கிலத்தில் ஆவுள் என்பது இதிலிருந்து வந்தது) பரமசிவனுக்குக் கம்பீரமான ரிஷபம், சரஸ்வதி தேவிக்கு நளினமான ஹம்ஸம், மஹா விஷ்ணுவிற்கு விரைந்து செல்லக்கூடிய கருடன் போன்று இருக்கையில் அழகே உருவான லக்ஷ்மி தேவிக்கு மட்டும் ஏன் அழகில்லாத ஆந்தை வாகனம்?
ஆந்தை பார்ப்பதற்கு அழகில்லா விட்டாலும், நள்ளிரவு இருட்டில் கூட துல்லியமாகப் பார்க்கக்கூடிய கூரிய கண் பார்வை உடையது, அதன் செவி நுட்பமும் அபாரம். இரவு முழுவதும் தூங்காமல் தனக்குத் தேவையான இரையைத் தேடும். ஆந்தை போன்று யார் ஒருவர் ஐம்புலன்களையும் எப்பொழுதும் கவனத்துடன் வைத்துக் கொண்டு தூக்கம். சோம்பல் பார்க்காமல் கடுமையாக உழைக்கத் தயாராக இருக்கிறார்களோ அவர்களைத் தேடி லக்ஷ்மி தேவி வருவாளாம். அதாவது பொருள் வசதிக்கு எப்பொழுதும் குறைவிராது.