ராஜபாளையம்; ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோயில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
இக்கோயிலில் ஆனி பெருந்திருவிழா ஜூன் 30ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினசரி சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடக்கிறது. விழாவின் தொடர்ச்சியாக ஜூலை 6ல் அஞ்சல் நாயகி மாயூரநாத சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை 10:30 க்கு தொடங்கியது. மாயூரநாத சுவாமி பிரியாவிடை உடன் பெரிய தேரிலும், அஞ்சல் நாயகி அம்மன் சிறிய தேரிலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்தனர். அம்மன் எழுந்தருவிய சிறிய தேரை பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்தனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜேஷ், தக்கார் சர்க்கரை அம்மாள் தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர். ராஜபாளையம் டி.எஸ்.பி பஸீனா பிவி தலைமையில் போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டனர்.