சாக்கோட்டையில் 63 தவில், நாதஸ்வர இசையுடன் 63 நாயன்மார் வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2025 11:07
காரைக்குடி; சாக்கோட்டை சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழாவில், 63 தவில் நாதஸ்வர இசையுடன் 63 நாயன்மார்கள் வீதி உலா நடந்தது.
சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழா ஜூலை 4ம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று, தபசு காட்சியில் 63 நாயன்மார் வீதி உலா நடந்தது. இதில், பெருமாள் குழுவினரால், 63 தவில், நாதஸ்வர இசை கச்சேரியுடன் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து நாயன்மார்கள் அம்பாள் தபசை தணிக்கும் நிகழ்ச்சியும், திருக்கல்யாணமும் நடந்தது. இதில், சாக்கோட்டை புதுவயல் உள்ளிட்ட பல்வேறு சுற்று பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஜூலை 12ம் தேதி தேரோட்ட நிகழ்ச்சியும் 13ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.