காரைக்கால் ; காரைக்கால் மாங்கனித்திருவிழா முன்னிட்டு காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் இன்று மிகவிமர்ச்சியாக நடந்தது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார் இவரின் இயற்பெயர் புனிதவதியார். 63 நாயன்மார்களின் பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனி கோவில் உள்ளது. காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஆண்டு தோறும் மாங்கனி திருவிழா நடக்கிறது. இத்திருவிழா கடந்த 8ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.அதைத்தொடர்ந்து மாலை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. இன்று காரைக்கால் அமையார் மணிமண்டபத்தில் மணமகன் பரமதத்தர் பட்டாடை நவமணி மகுடம், ஆபரணங்கள் அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார். பின் புனிதவதியார் பட்டுபுடவை உடுத்தி மணமகள் கோலத்தில் எழுந்தளினார். பாரம்பரியபடி திருமண மேடையில் மாப்பிள்ளை வீட்டாருக்கும். மணமகள் வீட்டார் கவுரவிக்கப்பட்டு தாம்பூலம் மாற்றிக் கொண்டனர். பின் யாகம் வளர்க்கப்பட்டு திருமணவிழாவிற்கான சடங்குகள் நடந்தது. காலை 10.25மணிக்கு ஆலய குருக்கள் புனிதவதியாருக்கும் மாங்கல்யம் அணிவித்தார். பின் மகா தீபாராதனை நடந்தது பின்னர் திருமணம் சங்குகள் நடந்தது. திருக்கல்யாண வைபவத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மாங்கல்யம், மஞ்சல்,கும்குமம், மாங்கனியுடன் கூடிய தாம்பூலபை வழக்கப்பட்டது. பின் மாலை ஸ்ரீபிக்ஷாடன மூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் திருமுருகன், நாஜிம் எம்.எல்.ஏ. டி.ஜ.ஜி. சத்தியசுந்தரம்.கோவில் நிர்வாகம் அதிகாரிஅருணகிரிநாதன், தனி அதிகாரி காளிதாசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து. கொண்டனர்.மேலும் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து பல்வேறு இடங்களில் 100க்கு மேற்பட்ட போலீசார் சி.சிடி.வி.கேமரா மூலம் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
மாங்கனி இறைத்தல்; காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா முக்கிய நிகழ்ச்சியான நாளை 10ம் தேதி அதிகாலை 3மணிக்கு பிஷாடணமூர்த்தி மற்றும் பஞ்சமூரத்திகளுக்கும் அபிஷேகம் நடக்கிறது.காலை பரமதத்தர் இரண்டு மாங்கனிகளை வீட்டிற்கு கொடுத்து அனுப்பும் நிகழ்ச்சியும். காலை 9மணிக்கு நான்கு திசையிலும் வேதபாராயணம் எதிரொளிக்க பரமசிவன் அடியார் கோலத்துடன் பவழக்கால் விமானத்தில் பத்மாசனத்திலமர்ந்து, வேதபாராயணத்துடன் வாத்தியங்கள் பவழக்கால் விமானத்தில் சிவபெருமாள் காவியுடை ருத்திராட்சம் மாலையுடன் பிச்சாண்டவர் கோலத்தில் புறப்பாடு நடக்கிறது. பக்தர்கள் சுவாமிக்கு மாங்கனி வைத்து தீபாரதனை செய்து,பின் வீட்டின் மாடிகளின் இருந்து மாங்கனி வீசும் வைபவம் நடைபெறுகிறது. இதனால் குழந்தைபாக்கியம் மற்றும் திருமணம் தடைகுடும்பபிரச்சனை உள்ளிட்ட நிவர்த்தி செய்யும் விதமாக பலர் மாங்னிகளை இறைக்கின்றனர், மாலை 6 மணிக்கு அடியார் கோலத்தில் திருமாளிகையில் எழுந்தருளும் சிவபெருமானை புனிதவதியார் அழைத்து வந்து மாங்கனியுடன் அமுது படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு பரமதத்தர் மனைவி புனிதவதியிடம் மற்றொருக் கனியைக் கேட்க மாங்கனியை வரவழைத்துக் கொடுத்த அவரது அற்புதக்காட்சியை கண்டு அதிர்ந்த பரமதத்தர் கப்பல் ஏறிப்பாண்டிய நாடாகிய ஸ்ரீசித்தி விநாயகர் செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.