எந்தத் துறையிலும் சாதிக்க விரும்பும் மேஷராசி அன்பர்களே!
நீங்கள் செவ்வாயை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள். அற்ப ஆசைக்கு இடம் கொடுக்காதவர்கள். ஆனால் சற்று முன்கோபக்காரர்கள். வாக்கு வன்மை நிறைந்தவர்கள். உங்கள் ராசிக்கு 7-ல் இருந்த சனி இதுவரை குடும்பத்தில் பல்வேறு பிரச்னைகளை கொடுத்திருப்பார். கருத்து வேறுபாடு காரணமாக சிலரின் குடும்பம் பிரிந்திருக்கலாம். அலைச்சலும் ஏற்பட்டிருக்கலாம். தீயோர் சேர்க்கை உங்களை அவப்பெயருக்குள்ளாக்கி இரு க்கலாம். இதனால் பண விரயம் ஏற்பட்டு இருக்கும். இப்படி கெடு பலன்களை தந்த சனி இப்போது 8-ம் இடத்திற்கு சென்றுள்ளார். அஷ்டமத்தில் சனியால் எப்படி நன்மை தர முடியும்? இங்கு அவர் உங்கள் முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். உறவினர்கள் வகையில் மனக்கசப்பும் கருத்து வேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். இவையெல்லாம் அஷ்டமத்து சனியின் பொதுவான பலன் தான். ஆனால் இந்த கெடு பலன்கள் அப்படியே நடக்கும் என்று கவலை கொள்ள வேண்டாம். காரணம் கோச்சாரப் பலனை பார்க்கும் போது மற்ற கிரகங்களின் நிலையையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
2015ம் ஆண்டு நிலை குடும்பத்தில் வசதி வாய்ப்பு அதிகரிக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தம்பதியினரிடையே சிறுசிறு பிணக்கு வரலாம். சற்று விட்டுக் கொடுத்து போவது நன்மைஅளிக்கும். ஆனால் ராகுவால் குடும்பத்தில் நிலவிய குழப்பம் வெகுவாக குறையும். ஒருவர் மனதை இன்னொருவர் புரிந்து கொள்ளும் நிலை உருவாகும். உங்கள் முயற்சிகளில் தடை அனைத்தும் விலகும். எடுத்த காரியத்தில் வெற்றியை காணலாம். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். குரு பகவானால் மன உளைச்சலும், உறவினர் வகையில் வீண் பகையும் ஏற்பட வாய்ப்புண்டு. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி நடத்துவதில் சிரமத்தை சந்திப்பீர்கள். சிலருக்கு சுபவிஷயத்தில் ÷ தவையற்ற தாமதம் ஆகலாம். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரிந்து செல்ல நேரிடலாம்.பணியாளர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலருக்கு விரும்பாத இடமாற்றம் ஏற்படும் சூழல் உருவாகும். விடாமுயற்சி செய்தால் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கலாம். தொழில், வியாபாரத்தில் நீண்ட துõர பயணம் அடிக்கடி ஏற்படலாம். வீண் அலைச்சல் உருவாகலாம். பண விரயம் ஆகலாம். எனவே யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். கலைஞர்கள் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியது இருக்கும். அரசியல்வாதிகள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். மாணவர்களுக்கு உழைப்புக்கு தகுந்த மதிப்பெண்கள் கிடைக்கும். ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது பயன் கொடுக்கும். விவசாயிகள் கால்நடை மூலம் சீரான வருமானம் பெறுவர். பயறு வகைகளில் நல்ல மகசூலை பெறலாம். வழக்கு விவகாரத்தில் சுமாரான பலனே கிடைக்கும். புதிய வழக்குகள் எதிலும் சிக்கிக் கொள்வது நல்லதல்ல. பெண்கள் மகிழ்ச்சிஉடன் காணப்படுவர். விருப்பம் போல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். கேதுவால் பித்தம், மயக்கம் போன்ற உபாதை ஏற்பட வாய்ப்புண்டு.
2015 ஜுலை 4ல் குரு சிம்மத்திற்கு மாறிய பின் பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சிலர் கடின முயற்சியால் புதிய வீடு கட்டத் தொடங்கலாம் அல்லது தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு குடி புக வாய்ப்பு வரும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் எளிதில் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் வகையில் இருந்து வந்த பிணக்கு மறையும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பின்தங்கிய நிலை மறையும்.
2016ம் ஆண்டு நிலை பொருளாதார வளம் அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்கி குவிக்கலாம். எடுத்த காரியத்தை துரிதமாக முடிப்பீர்கள். மக்கள் மத்தியில் கவுரவம் மேம்படும். புதிய உறவு ஏற்படும். அவர்களால் நன்மை கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். குடும்பத்தோடு புண்ணியத் தலங்களுக்கு சென்று வரலாம். ஞானிகளின் ஆசியும் ஆதரவும் உங்கள் குடும்பத்துக்கு கிடைக்கும்.உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரிகள் விற்பனையைப் பெருக்கி அமோக லாபம் காண்பர். புதிய தொழில் தொடங்கவும் வாய்ப்புண்டாகும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவர். விவசாயிகள் நல்ல வளத்தோடு காணப்படுவார்கள். பெண்கள் திருப்திகரமாக இருப்பர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். பிறந்த வீட்டிலிருந்து பொன் பொருள் வந்து சேரும்.
2017 ஜூலை வரைகுடும்பத்தில் பல்வேறு முன்னேற்றம் தற்போது உருவாகும். கணவன், மனைவி இடையே இணக்கம் அதிகரிக்கும். வசதியான வீட்டிற்கு குடிபோகும் நிலை ஏற்படும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பணியில் மேம்பாடு காணலாம். அதிகாரிகள் உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். தொழில், வியாபாரத்தில் அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தீயோர் சேர்க்கையால் அவதியுற்றவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபட்டு நிம்மதி காண்பர். கலைஞர்கள் அரசாங்க வகையில் விருது கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். புதிய பதவியும் கிடைக்க பெறுவர். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். கைவிட்டு போன சொத்து மீண்டும் கிடைக்கும். பெண்கள் குழந்தை பாக்கியம் பெற்று சந்தோஷம் காண்பர்.
2017 டிசம்பர் வரைகுடும்பத்தில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். புதிய வீடு, மனை வாங்க அதிக முயற்சி ÷ மற்கொள்ள வேண்டியதிருக்கும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்புண்டு. பயணத்தின் போது கவனம் தேவை. பணியாளர்கள் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவர். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புண்டு. தொழில், விய õபாரத்தில் எதிரிகள் வகையில் ஒரு கண் இருப்பது நல்லது. பண முதலீட்டைவிட, உழைப்பை நம்பித் தொழில் செய்வது நல்லது. கலைஞர்கள் வாழ்வில் சிறப்படைவர். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் சீரான வளர்ச்சி காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மாணவர்கள் ஆர்வமுடன் படித்து நல்ல மதிப்பெண் பெறுவர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி அடைவர். விவசாயிகள் அதிகமாக உழைக்க ÷ வண்டியிருக்கும். வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். பெண்கள் எப்போதும் உற்சாகமாக காணப்படுவர். அடிக்கடி விருந்து,விழா என சென்று வருவீர்கள். உடல் நலம் சுமாராக இருக்கும். உஷ்ணம், தோல், தொடர்பான நோய் ஏற்படலாம் கவனம்.
பரிகாரப்பாடல்!
பெற்ற தாய்தனை மகன் மறந்தாலும்பிள்ளையைப் பெறுந்தாய் மறந்தாலும்உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும்கற்ற நெஞ்சம் கலை மறந்தாலும்கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும் நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்நமச்சிவாயத்தை நான் மறவேனே.
பரிகாரம்!
சனிக்கிழமை ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றுங்கள். காக்கைக்கு அன்னமிட்டு சாப்பிடுங்கள். சிவன் கோயிலு க்கு பிரதோஷத்தன்று சென்று வாருங்கள். துர்க்கை அம்மனை ராகு காலத்தில் வணங்கி வாருங்கள். வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் பத்ரகாளியை வணங்குங்கள்.