கோயில்களில் பவுர்ணமி பூஜை: சுவாமிக்கு பால், பஞ்சாமிர்தத்தால் சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2026 08:03
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சுவாமி, நந்திக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தத்தால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதுபோல் விருப்பாச்சி தலையூற்று நல்காசி விஸ்வநாதர் கோயில், ஒட்டன்சத்திரம் ரத்தினகிரீஸ்வரர் கோயில், நவாமரத்துப்பட்டிபுதூர் ஸ்படிகலிங்கேஸ்வரர் கோயில், பஞ்சலிங்கேஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது.