மானாமதுரை நாகநாதர் கோயில் மண்டலாபிஷேக விழா, பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2026 03:03
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் 3வது தெருவில் அமைந்துள்ள நாகநாதர் கோயிலில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தினம் தோறும் மாலை சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை, பூஜைகள் நடைபெற்று வந்தன.நேற்று காலை மண்டலாபிஷேக விழாவை முன்னிட்டு கோயில் முன்பாக புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு ஹோமங்கள் வளர்த்த பின்னர் சுவாமிக்கு பால், பன்னீர்,சந்தனம், இளநீர்,திரவியம், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர் புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை சுற்றி வலம் வந்து சுவாமி மீது ஊற்றி மண்டலாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தது. மண்டலாபிஷேக விழாவில் மானாமதுரை, பட்டத்தரசி,ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.