Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாரியூர், சாயல்குடியில் மாசி மகம் ... மானாமதுரை நாகநாதர் கோயில் மண்டலாபிஷேக விழா, பக்தர்கள் சுவாமி தரிசனம் மானாமதுரை நாகநாதர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
கோவை கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

04 மார்
2026
03:03

கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே உற்சவர் கோனியம்மன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கோவையில் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் அருள்மிகு கோனியம்மன் கோவில் 2026 .ம் ஆண்டு தேர் திருவிழா கடந்த ஜனவரி மாதம் 28-01-2026 அன்று தேர் முகூர்த்தக்கால் நிகழுடன் துவங்கியது.தொடர்ந்து 17.02.2026 அன்றுபூச்சாட்டுதல் நிகழ்ச்சி,கிராம சாந்தி ஆகியன நடந்தது. 24.02-2026 அன்று கொடியேற்றம் |அக்னிசாட்டு ஆகியன நடைபெற்றது.நாள்தோறும் அம்மன் திருவீதியுலா நகர வீதிகளில் பவனி வந்தார்.இதில் புலி வாகனம் |கிளி வாகனம்,சிம்ம வாகனம்,அன்ன வாகனம்,காமதேனு வாகனம்,வெள்ளை யானை வாகனம் ஆகிய வாகனங்களில் உற்சவர் அம்மன் காட்சி அளித்தார்.தொடர்ந்து திருவிளக்கு வழிபாடு திருக்கல்யாண வைபவம் ஆகிய நடைபெற்றது.தேரோட்டத்தின் நாளான புதன்கிழமை 04-03 2026 அன்று கோவை ராஜவீதி தேர் திடலில் பொதுமக்கள் தேரின் சக்கரத்திற்கு உப்பு -மிளகு ஆகியன இறைத்து வழிபட்டனர். தொடர்ந்து மதியம் 2 - 30 மணியளவில் தேரானது பூஜை செய்யப்பட்டு கோவை நகர வீதிகளில் வலம் வந்தது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.தேரோட்டத்தை காண கோவை, திருப்பூர், அவிநாசி. அன்னூர், பொள்ளாச்சி, உடுமலை, உதகை ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.தேர் தேர் வலம் வரும் வீதிகளில் பொதுமக்களுக்கு அன்னதானம் நீர்மோர் குடி தண்ணீர் ஆகியன வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 
temple news
 சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கைலாய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar